எண்ணும் எழுத்தும் திட்ட கருத்தாளா்களுக்கு பயிற்சி


எண்ணும் எழுத்தும் திட்ட கருத்தாளா்களுக்கு பயிற்சி
x

எண்ணும் எழுத்தும் திட்ட கருத்தாளா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

தமிழக அரசு கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கவும் மாணவர்களுக்கு புரிதலுடன் கூடிய அடிப்படை திறன்களை மேம்படுத்தவும் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தியது. இத்திட்டமானது நடப்பு கல்வி ஆண்டு 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. ஒன்றிய அளவில் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 4 மற்றும் 5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியானது 3 நாட்கள் வழங்கப்பட உள்ளது. ஒன்றியங்களில் பயிற்சி வழங்க உள்ள முதன்மை கருத்தாளர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி புதுக்கோட்டை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது.


Next Story