போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல்திறன் தேர்வுக்கு பயிற்சி


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல்திறன் தேர்வுக்கு பயிற்சி
x

நாமக்கல்லில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல்திறன் தேர்வுக்கு பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, அடுத்தகட்டமாக நடைபெறும் உடல் அளவீடு சோதனை மற்றும் உடல் திறன் சோதனை தேர்வில் வெற்றி பெற உரிய வகையில் முன்னேற்பாடாக உடற்தகுதி பயிற்சி வகுப்பு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டுத் திடலில் நேற்று தொடங்கியது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.ஆர்.பி. டெட் பயிற்சி வகுப்பு பிற்பகம் 2 மணி முதல் 3.30 மணி வரையிலும் நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மனுதாரர்கள் இப்பயிற்சி வகுப்பிலும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story