சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகாத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரிஸ்வரர் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சிறுநாகலூர் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல்லூர் கைலாசநாதர் கோவில், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.