சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

தியாகதுருகம் சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

-

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சிறுநாகலூர் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசாமி, எறஞ்சி காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர், வடதொரசலூர் பெரியநாயகி உடனுறை பழமலை நாதர், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர், குடியநல்லூர் கைலாசநாதர், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர் நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story