சோழபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா


சோழபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
x

சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.

சோளிங்கர் பஜார் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கனககுஜம்மாள் சமேத சோழபுரீஸ்வரர் திருக்கோவிலில் தை பிரதோஷம் முன்னிட்டு சோழபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், திருநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அனிவித்துபட்டு வஷ்திரம், அருகம்புல் மாலை, மலர்மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நந்தி மீது சோழபுரீஸ்வரர், கணககுஜம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார் மங்கள வாத்தியங்களுடன் திருக்கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் ஆலயத்தில் பிரதோஷம் முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் திருநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை, மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

=======


Next Story