சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை


சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை
x

சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை

மதுரை

அலங்காநல்லூர்

மதுரை பாலமேட்டில் ஆனி மாத பிரதோஷ பூஜைகள் அங்குள்ள சிவன் கோவிலில் நடந்தது. இதில் சுவாமிக்கு, பால், பழம், விபூதி, சந்தனம், தீர்த்தம், வில்வ இலை உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவன் காட்சி தந்தார். சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பெண்கள், பக்தர்கள் வந்திருந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் அலங்காநல்லூர் அய்யப்பன் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. இங்கும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடந்தது. மேலும் அலங்காநல்லூர் தெப்பக்குளம் சிவபெருமான் கோவிலிலும் பிரதோஷ பூஜை நடந்தது. இதை போல காஞ்சரம்பேட்டை, சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது.


Next Story