கோவில்களில் பிரதோஷ பூஜை


கோவில்களில் பிரதோஷ பூஜை
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-04T00:16:29+05:30)

பெரியகுளம் பகுதியில் உள்ள கோவில்களில் பிரதோஷ பூைஜ நடந்தது.

தேனி

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் மலைக் கோவிலில் தை மாத பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதனையொட்டி நந்திகேஷ்வரர், கைலாசநாதருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி நந்திகேஸ்வரருக்கு 48 பிரதோஷங்களில் வைக்கப்பட்டிருந்த ருத்ராட்சங்கள், பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திருமஞ்சனப் பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.


Related Tags :
Next Story