பிரதோஷ வழிபாடு


பிரதோஷ வழிபாடு
x

பிரதோஷ வழிபாடு

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமையான கமலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமை சோமவார பிரதோச வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவர்கள் ரிஷப வாகனத்தில் உள் மண்டப பிரகாரத்தில் வலம் வந்தனர்.

இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மேலும் சாமிகள் ரிஷப வாகனத்தில் உள் மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story