பிரதோஷ வழிபாடு
எஸ்.புதூர் அருகே கைலாசநாதர் கோவிலில் தை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமையான கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் தை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு பால், பழம், இளநீர், நெய் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கமலாம்பிகா சமேத கைலாசநாதர், உலகநாயகி சமேத உலகநாத சாமி ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story