உத்தமசோழபுரம் கரபுரநாதர்சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு


உத்தமசோழபுரம் கரபுரநாதர்சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

உத்தமசோழபுரம் கரபுரநாதர்சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சேலம்

கொண்டலாம்பட்டி,

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது முன்னதாக பெரிய நாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால்,நெய், தயிர்,தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றுமு் தீபாராதனை நடைபெற்றது. பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமி அலங்கரிக்கப்பட்டு, நந்தி தேவர் மீது வீற்றிருந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வழிபாட்டில், உத்தமசோழபுரத்தை சுற்றியுள்ள பெரிய புத்தூர், பூலாவரி, நெய்க்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, வீரபாண்டி, அரியானூர், சிவதாபுரம், இளம்பிள்ளை, தம்மநாயக்கன்பட்டி, சீலநாயக்கன்பட்டி, ஆட்டையாம்பட்டி, சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

1 More update

Next Story