தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமி, அம்பாள், நந்திக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து விஸ்வநாதருக்கும், வேதாந்தநாயகிக்கும் சிறப்பு வெள்ளி கவச அலங்காரம் அணிவிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் பிரகாஷ் சிவாச்சாரியார் செய்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சூரியவாசல் வழியாக கோவிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது அனைவருக்கும் ருத்ராட்ச பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story