சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கரூர்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தோகைமலை அருகே தொண்டமாங்கினத்தில் உள்ள ஆதிசிவன் கோவிலில் நந்திபகவானுக்கு பால், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

நொய்யல் நன்செய் புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார்.

வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் நந்திபகவானுக்கு பால், மஞ்சள், உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இதேபோல் குளித்தலை அருகே சிவாயத்தில் உள்ள சிவபுரீசுவரர் கோவிலில் நந்திபகவானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.


Next Story