சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 13 Oct 2023 2:00 AM IST (Updated: 13 Oct 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மதுரை

இம்மையில் நன்மை தருவார் கோவில்

மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி அங்குள்ள நந்திபெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பிரதோஷ நாயகர் கோவிலில் உட்பிரகார புறப்பாடு நடந்தது.

இதே போல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பந்தடி 5-வது தெரு ஆதி சிவன் கோவில், அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

பாலமேடு

பாலமேடு பஸ் நிலையம் அருகில் உள்ள சிவன் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள், மாத சிவராத்திரி பூஜைகள் நடந்தது. இதில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் அலங்காநல்லூரில் உள்ள அய்யப்பன் கோவில் உள் பிரகாரத்தில் இருக்கும் சிவன் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதில் சிவன், பார்வதிக்கு பல்வேறு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story