சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சிறுநாகலூர் ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி கைலாசநாதர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story