சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கரூர்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்திக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்திக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேக பாலீஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதேபோல் திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவில், புன்னம்சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story