சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
நஞ்சை புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் திருக்காடுதுறை, புன்னம், குந்தாணிபாளையம் நத்தமேடு மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதேபோல் தோகைமலை அருகே விராசிலை ஈஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. இதேபோல தோகைமலை, சின்ன ரெட்டிபட்டி, கழுகூர் உள்பட பல்வேறு சிவன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.