சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
மூங்கில்துறைப்பட்டு
சங்கராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. புதுப்பேட்டை ஸ்ரீவியாக்க புரீஸ்வரர் கோவிலில் நந்திக்கும், சிவனுக்கும் பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். அதேபோல் பாக்கம் சிவன், மூங்கில்துறைப்பட்டு பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர் நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். இது தவிர அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரிஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.