சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

அதேபோல ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன்கொல்லம் கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாத்தூர்

சாத்தூரில் உள்ள சிவன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், இருக்கன்குடியில் உள்ள கைலாசநாதர் கோவில், கோல்வார்பட்டி சிவன் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக சிவன் மற்றும் நந்திக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி வீதி உலா நடந்தது.


Next Story