சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் உள்ள நஞ்சுண்டதேசிக ஈஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி கைலாசநாதர் கோவில், வடபூண்டி கைலாசநாதர் கோவில், வடதொரசலூர் பழமலைநாதர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல்லூர் கைலாசநாதர் கோவில், கனங்கூர் ராமநாத ஈஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதேபோல் கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.