சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி, மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம் பகுதி சிவன்கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தாிசனம்செய்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

காசி விஸ்வநாதர் கோவில்

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் சுக்கிர வார பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வர பகவானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அலங்காரம், அர்ச்சனை, உபசார பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

மூங்கில்துறைப்பட்டு

இதேபோல் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. அந்த வகையில் ராவத்தநல்லூர் ஸ்ரீ வியாக்கபுரீஸ்வரருக்கு பால், தயிர், வெண்ணெய், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வியாக்கபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இது தவிர மூங்கில்துறைப்பட்டு, பாக்கம், புதுப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சங்கராபுரம்

சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர் நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் சங்கராபுரம் சன்னதிதெரு மணிமங்களநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர், அ.பாண்டலம் அமிர்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், வடபொன்பரப்பிசுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story