சங்கராபுரம் பகுதிகோவில்களில் பிரதோஷ வழிபாடு
சங்கராபுரம் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போன்று சங்கராபுரம் சன்னதி தெரு மணிமங்களநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் அமிர்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் பாலாம்பிகா சமேத தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் காமாட்சிஅம்பாள் சமேத கைலாசநாதர், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.