கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதேபோல நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர், நரிக்குடி எமனேஸ்வரர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாத சுவாமி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர், சீதக்கமங்கலம் மூலநாதர், திருக்களம்பூர் வில்வனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேற்கண்ட கோவில்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.