கோவில்களில் பிரதோஷ வழிபாடு


கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:47 PM GMT)

பெரியகுளம், போடியில் உள்ள கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தையொட்டி, பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் உள்ள மலை மேல் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திகேஷ்வரர், கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இ்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இந்த வழிபாட்டில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் பெரியகுளம் பாலசுப்ரமணிய சுவாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், தென்கரை காளியம்மன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சோமவார பிரதோஷத்தையொட்டி, போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி‌ மல்லையப்ப சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, சிவ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story