சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு


சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது

மதுரை

திருப்பரங்குன்றம்

வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவனடியார்களால் பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமாகி சிவபெருமானுக்கு தீப தூப ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டனர்.

இதேபோல திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் கருவறையில் 5 சன்னதிகள் ஒன்றான சத்யகிரீஸ்வரருக்கு பிரதோஷ பூஜைகள் நடந்தது. மேலும், நந்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மேளதாளங்கள் முழங்க சுவாமி-அம்பாள் புறப்பாடு நடந்தது. இதேபோல சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில், மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி, பாண்டியன் நகரில் உள்ள கல்யாண விநாயகர் கோவிலில் காசி விஸ்வநாதர் சன்னதியிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

1 More update

Next Story