கிணத்துக்கடவு பகுதியில் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கிணத்துக்கடவு பகுதியில் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
பிரதோஷத்தையொட்டி கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சாமி கோவிலில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று காசி விசுவநாதரை தரிசனம் செய்து பிரசாதம் வாங்கிச் சென்றனர். இதே போல் கிணத்துக்கடவு சிவலோகநாதர் உடனமர் சிவலோகநாயகியம்மன் கோவிலில் உள்ள சிவலோகநாதருக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவலோகநாதர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story