வரலாற்றில் தனித்தடம் பதித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - கமல்ஹாசன் புகழாரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் சேகர் பாபு ஏற்பாடு செய்த புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார். 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது.
இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,
மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்த புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்தேன்.
அரை நூற்றாண்டுத் தமிழக அரசியல் வரலாற்றில் தனித்தடம் பதித்த முதல்-அமைச்சரின் வாழ்க்கைப்பயணத்தை இன்றைய தலைமுறையினர் உணர்ந்துகொள்ள இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story