பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்
பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நடந்தது.
திருச்சி
துறையூர்:
துறையூர் பெருமாள்மலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி மலையில் இருந்து அடிவாரத்தில் உள்ள கோவிந்தராஜப்பெருமாள் கோவிலில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் மேஷ லக்னத்தில் ரதாரோஹனம் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி தேரில் எழுந்தருளினார். காலை 8.30 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story