கோவை மாநகராட்சி ஆணையாளராக பிரதாப் பொறுப்பேற்பு


கோவை மாநகராட்சி ஆணையாளராக பிரதாப் பொறுப்பேற்பு
x

கோவை மாநகராட்சி ஆணையாளராக பிரதாப் பொறுப்பேற்றார். அவர், வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்றார்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சி ஆணையாளராக பிரதாப் பொறுப்பேற்றார். அவர், வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்றார்.

புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த ராஜகோபால் சுன்கரா, சென்னை குடிநீர் வாரிய திட்ட செயல் இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் கலெக்ட ராக பணியாற்றி வந்த மு.பிரதாப் கோவை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் ராஜகோபால் சுன்கரா பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய ஆணையாளர் பிரதாப்புக்கு மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:-

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதற்கட்டமாக பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க முன்னுரிமை அளித்து பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

சமீபகாலமாக மாநகராட்சியில் வாராந்திர கூட்டம் நடத்தப் பட வில்லை என்று பலர் என்னிடம் கூறினர். எனவே வரும் காலங்களில் மேயர் தலைமையில் வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி, பொதுமக்களின் பிரச்சினை தொடர்பாக மனுக்களை பெற்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய நடவடிக்கை

வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்பு இருந்த ஆணை யாளர், சிறப்பான பணிகளை செய்து முடித்து உள்ளார். அவர், கொண்டு வந்த திட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். மு.பிரதாப், கடந்த 2017-ம் ஆண்டு நாட்டிலேயே 21-வது இடத்திலும்,

தமிழக அளவில் முதல் இடத்திலும் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். அதைத்தொடர்ந்து அவர், டெல்லியில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயலாளராக வும், தர்மபுரி, அரூரில் சப்-கலெக்டராகவும், பின்னர் திருவண் ணாமலை மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story