சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கைலாசநாதர், வைத்தீஸ்வரர், காசி விசுவநாதர், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், ஆவூர் பசுபதீஸ்வரர், அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், சந்திரசேகரபுரம் சந்திரமவுலீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி ருத்ரகோடீஸ்வரர், நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நவக்கிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படும் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


Next Story