கோவில்களில் பிரதோஷ வழிபாடு


கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருவாரூர்

குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், மஞ்சள், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார். இதேபோல் குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், கூந்தலூர் ஜம்புகேஸ்வரர் கோவில், சீதக்கமங்கலம் மூலநாதர் கோவில், திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


Next Story