கோவில்களில் பிரதோஷ வழிபாடு


கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர், பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி குருபரிகார கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பூவனூர் கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story