பிரத்தியங்கிரா தேவி கோவில் குடமுழுக்கு
பிரத்தியங்கிரா தேவி கோவில் குடமுழுக்கு நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சி மேலவல்லம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரத்தியங்கிராதேவி கோவில் குடமுழுக்கு நடந்தது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி மற்றும் யாகசாலை பிரவேசம் நடந்தது. இதையடுத்து யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதையடுத்து யாக சாலையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட புனிதநீர் விமான கலசத்தில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு பூஜைகளை ஆச்சாள்புரம் சம்பந்தம் சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் கோவில் அறங்காவலர் பாரி வள்ளல் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.