ஒடிசா மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் -இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!


ஒடிசா மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் -இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!
x

ஒடிசா ரெயில் விபத்து செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் விபத்தை அறிந்து அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரெயில் விபத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமால் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது "ஒடிசா ரெயில் விபத்து மிகவும் மோசமானது. இந்த செய்தி பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒடிசா மக்களுக்காக பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story