வருமுன் காப்போம் மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
x

விண்ணமங்கலம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாறி மாறி தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.காந்தி தலைமையில் நடந்தது.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அ.கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பிரகாஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

சிறிதுநேரம் கழித்து தி.மு.க. சார்பில் மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை மீண்டும் குத்துவிளக்கேற்றி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் 2 முறை குத்துவிளக்கு ஏற்றுதல், 2 முறை விழா நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழாவில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வக்கீல் கே.சங்கர், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபிரகாஷ், ரங்கநாதன், நகர செயலாளர்கள் அசோக் குமார், பாண்டியன், நகரசபை உறுப்பினர் ஏ.ஜி.மோகன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தம், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மேலாண்மை குழு உறுப்பினர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.மோகன், துரை மாமது, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மருத்துவ குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story