வருமுன் காப்போம் திட்ட முகாம்
கீழையூர் அருகே வருமுன் காப்போம் திட்ட முகாம் நடந்தது.
வேளாங்கண்ணி:
கீழையூர்ஒன்றியம் சோழ வித்தியாபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் வட்டார அளவிலான சுகாதார வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமில் காசநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய், காது மூக்கு தொண்டை நோய், எலும்பு முறிவுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒரு சிலர் மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காசநோயாளிகளுக்கு உணவு பெட்டகத்தை செல்வராஜ் எம்.பி. வழங்கினார். அதே போல் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்துணவு அடங்கிய உணவு பெட்டகமும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ., நாகை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின்அமுதா மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி, ஊராட்சி மன்ற தலைவர் கோமதிதமிழ்ச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மேற்பார்வையாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.