தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை


தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
x

தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

விருதுநகர்

திருச்சுழி,

தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

வகுப்புகள் தொடக்கம்

திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முதலாம் ஆண்டு வகுப்பினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் படித்தால் வேலை வாய்ப்பு இல்லை. தமிழ் படிப்பதற்கு ஆட்கள் கிடையாது. தமிழ் படித்தால் என்ன கிடைக்கும் என்ற நிலைமை மாறி இன்று தமிழ் படித்தால் தான் வேலை என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. வேலைவாய்ப்புகளில் உங்களுக்கு உறுதி அளிக்கக் கூடிய திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி தந்துள்ளார்.

வேலை வாய்ப்புகள்

தமிழ் படித்தால் தான் வேலை வாய்ப்புகள் என்று பார்த்தவுடன் இன்று வேலை வாய்ப்பு தேடுபவர்கள் தமிழை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்கள். தற்போது தமிழ் படித்தவர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முதலாமாண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். விழாவில் திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத்தம்பி, ஒன்றிய குழு துணைத்தலைவர் மூக்கையா, ஒன்றிய கவுன்சிலர் சந்தன பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் நரிக்குடி போஸ், கல்லூரி முதல்வர் மணிமாறன், நகர செயலாளர் சிவக்குமார், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story