டியூப்லைட்டுகளில் நடந்த கர்ப்பிணி


டியூப்லைட்டுகளில் நடந்த கர்ப்பிணி
x

டியூப்லைட்டுகளில் நடந்த கர்ப்பிணி

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன்.பல்வேறு கிராமிய கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார்.இவருடைய மனைவி பிரகலட்சுமி. கிராமிய கலைகளில் ஆர்வமுடைய இவர், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில், நாடு முழுவதும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், இந்த குற்றங்களுக்கான தண்டனை பிரிவு சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தியும் கைகளில் பறை இசை அடித்தபடி, 30 டியூப் லைட்டுகளின் மீது நடந்த படி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

ஒவ்வொரு லைட்டையும் வெறுங்கால்களால் உடைத்தபடி, 3.55 வினாடிகளில் இவர் செய்த இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.சாதனை குறித்து நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி கூறுகையில், "தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான தண்டனைகளை அதிகபடுத்தும் விதமாக சட்டப்பிரிவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றார்.

1 More update

Next Story