தள்ளுவண்டி மீது பஸ் மோதி கர்ப்பிணி காயம்
தள்ளுவண்டி மீது பஸ் மோதி கர்ப்பிணி காயம்அடைந்தார்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜ் மனைவி பவித்ரா(வயது 23). இவர் 7 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இவர் நேற்று கடுகு சந்தை சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே தண்ணீர் பிடிப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ராமேசுவரத்திலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பஸ் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே தண்ணீர் எடுத்து செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தள்ளு வண்டி மீது மோதியது. அந்த தள்ளுவண்டி அப்பகுதியில் நின்ற பவித்ரா மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து பவித்ரா மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.