கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு


கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு
x

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4 தேர்வு மையங்களில் முதற்கட்ட எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. முதற்கட்ட எழுத்துத்தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்களில் தகுதியான நபர்களுக்கு கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கும் செய்யும் இணையதள முகவரி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி வாயிலாக தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 1. https://www.tn.gov.in/, 2. https://cra.tn.gov.in/, 3. https://mayiladuthurai.nic.in/- (District Official Website), 4. https://agaram.tn.gov.in ஆகிய இணையதள முகவரி வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story