மண்ணிவாக்கம் ஊராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி


மண்ணிவாக்கம் ஊராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி
x

மண்ணிவாக்கம் ஊராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளை பெங்களூரு குழுவினர் பார்வையிட்டனர்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காய்கறி கழிவுகள், மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் இயங்கி வருகிறது. இந்த நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணியில் தினந்தோறும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மண்ணிவாக்கம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளை கர்நாடகா மாநிலம் பெங்களூரு சர்ச் பாரத் திட்டத்தின் நோடல் அதிகாரியும், அரசு துணை செயலாளருமான டாக்டர் நோமேஷ் குமார் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு காய்கறி கழிவு மற்றும் மக்கும் குப்பையில் இருந்து எப்படி நுண்ணுயிர் உரங்கள் தயாரித்து அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.

அப்போது அவர்களுடன் உதவி செயற்பொறியாளர் விக்டர் அமிர்தராஜ், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய் கிருஷ்ணன், மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், துணைத் தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற செயலாளர் ராம பக்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story