ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள்


ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள்
x

ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்

நாட்டின் பாதுகாப்பு பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரிய வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில், 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இதில் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஆன்லைனில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு தகுதியானவர்களை ராணுவ பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கான முகாமாக நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.முகாமில் கலந்து கொள்ளும் நபர்களின் விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்வதற்கும், சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கும், மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணுவத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் கற்பகம் ஆய்வு செய்ய உள்ளார்.


Next Story