சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 20 May 2023 12:45 AM IST (Updated: 20 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா முன்னேற்பாடுபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா முன்னேற்பாடுபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சூலக்கல் மாரியம்மன்

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தேர் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சியாக 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா கடந்த 8-ம் தேதி முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. வருகிற 24-ந் தேதி மாவிளக்கு எடுத்து பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். 25-ந் தேதி மாலை சூலக்கல் மாரியம்மன் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து தேரோட்டம் நடைபெறுகிறது.

முன்னேற்பாடு பணிகள்

இந்த தேரோட்டம் 25-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. தேரோட்டம் நடைபெற இன்னும் 5 நாட்களே இருப்பதால் சூலக்கல் மாரியம்மன் கோவில் அருகில் கூடாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர், விநாயகர் சப்பரம் வெளியே கொண்டுவரப்பட்டு கோவில் முன்பு நிறுத்தப்பட்டு தேரின் சக்கரங்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்து பராமரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் தேர் சக்கரத்தை தடுத்து நிறுத்தக்கூடிய மரக்கட்டைகளும் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கலை கட்டி உள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களும் விழாக்கோலம் பூண்டு உள்ளது.


Next Story