வீரர்களை தயார்படுத்த வேண்டும்
தேசிய அளவிலான கால்பந்து போட்டிக்கு வீரர்களை தயார்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீலகிரி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கல்பந்தாட்ட கழக 51-வது ஆண்டு கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கழக தலைவர் மணி வரவேற்றார். ஆண்டு அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை செயலாளர் மோகன முரளி சமர்ப்பித்தார். கூட்டத்தில் அகில இந்திய கால்பந்தாட்ட கழகத்தின் தொலைதூர பார்வையை கருத்தில் கொண்டு 13, 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்த வேண்டும். தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற வீரர்களை தயார்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை சார்ந்த 44 கால்பந்து அணிகளின் செயலாளர்கள், தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story