வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயார்


வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயார்
x

வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயார் என்று தீயணைப்பு துறை டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை,:

வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயார் என்று தீயணைப்பு துறை டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை

தமிழக முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், வடக்கிழக்கு பருவ மழையை எதிர் கொள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டி.ஜி.பி. பி.கே.ரவி கடலோர மாவட்டங்களின் உள்ள தீயணைப்பு நிலையங்களை ஆய்வு செய்து வருகிறார்.

தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்தை டி.ஜி.பி. பி.கே.ரவி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த மீட்பு உபகரண கருவிகள், தீயணைப்பு வாகனம் போன்றவற்றை ஆய்வு செய்தார். அப்போது மீட்பு உபகரணங்களையும் இயக்க செய்து, சரியான பராமரிப்பில் உள்ளதா? எனவும் கேட்டறிந்தார். மேலும், கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூயிருப்பதாவது்-

முதல்-அமைச்சர் அறிவுரைபடி கடலோர பகுதியில் புயல், வெள்ளம் பேரிடர் ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்க்கொள்ள அனைத்து தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

மீட்பு உபகரணங்கள் தயார்

தீயணைப்பு வாகனங்கள் மீட்பு உபகரணங்கள் படகுகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் மீட்புபடை வீரர்கள், கமாண்டோ போலீசார் ஆகியோர் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட அலுவலர் வடிவேல், கூடுதல் மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், முத்துப்பேட்டை நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story