ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை


ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை
x

ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை (இன்று) மதியம் சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் சிறப்பு அழைப்பாளர்களுக்கான கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கத்தினர்களான அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க., பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.

சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பழங்குடியின பெண் வேட்பாளரான முர்முவுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும். சென்னை வரும் அவரை வரவேற்க தயாராகுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story