ஜனாதிபதி தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் வாக்களிக்கிறார்

இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் வாக்களிக்கிறார்.
சென்னை,
இந்திய ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் டெல்லி சென்று வாக்களிக்க முடியாத எம்.பி.க்கள் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை அலுவலக வளாகத்தில் வாக்களிக்க உள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 14-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது.
இது குறித்து, அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, "ஓ.பன்னீர்செல்வம், கொரோனா தொற்று முழுமையாக நீங்கி, ஆஸ்பத்திரியில் இருந்து நாளை (இன்று) வீடு திரும்புகிறார். அதைத்தொடர்ந்து, அவர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார்" என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






