முகவரி கேட்பது போல் நடித்து ஆசிரியர் மனைவியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
முகவரி கேட்பது போல் நடித்து ஆசிரியர் மனைவியிடம் 7 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை ராம் நகர் 3-ம் வீதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வித்யா (வயது 33). இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற தன் மகனை அழைத்து வர சென்றுள்ளார். ராம்நகர் முக்கம் பகுதியில் வந்தபோது 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்துள்ளனர். பின்னர் மர்ம ஆசாமிகள் வித்யாவிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து வித்யா அளித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story