கல்வராயன்மலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை


கல்வராயன்மலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தில் கரியாலூர் வட்டார மருத்துவர் சுரேஷ் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதில் கொசுப்புழு ஒழிப்பு பணி நடைபெற்றது. மேலும் பயன்பாடற்ற டயர்கள், உரல்கள், பிளாஸ்டிக் பேரல்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதேபோல் வெள்ளிமலை, கரியாலூர் ஆகிய கிராமங்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதுப்பாலப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாராத சின்னையன், துணை தலைவர் அலமேலு முத்தையன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவண மோகன்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், கலைச்செல்வி, ஜனார்த்தனன், தயாநிதி, சதீஷ்குமார், மற்றும் வார்டு உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story