சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்


சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 29 Jun 2023 11:45 PM IST (Updated: 30 Jun 2023 12:09 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 18 வயது நிரம்பாத ஒரு சிறுமிக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் கலவையைச் சேர்ந்த 22 வயது ஆணுக்கும் நேற்று காலை கலவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

மணப்பெண்ணுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் அவருக்கு திருமணம் நடைபெறுவதாக கிராம நிர்வாக அலுவலர் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கே.வி.குப்பம் வட்டார சமூக நல விரிவாக்க அலுவலர் சித்ரா, லத்தேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன், வட்டார சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியை மீட்டு அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story