நெல்லையில் காய்கறிகள் விலை சற்று குறைந்தது


நெல்லையில் காய்கறிகள் விலை சற்று குறைந்தது
x

நெல்லையில் காய்கறிகள் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

திருநெல்வேலி

காய்கறிகள் விலை கடந்த 1 மாதமாக உயர்ந்துள்ளது. தக்காளி, சின்ன வெங்காயம் (உள்ளி), பூண்டு, மிளகாய் உள்ளிட்டவை விலை கடுமையாக உயர்ந்தது. தக்காளி, சின்ன வெங்காயம் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொது மக்கள் காய்கறிகளை குறைந்த அளவே சமையலில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லையில் நேற்று காய்கறிகள் விலை சற்று குறைந்திருந்தது. பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் 1 கிலோ ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை நேற்று ரூ.5 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் அதிகபட்சம் ரூ.120 வரை விற்கப்பட்டது.இதே போல் சின்ன வெங்காயம் உயர் ரகம் 1 கிலோ ரூ.105-ல் இருந்து ரூ.95-ஆக குறைந்தது. சுமார் ரகம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. முட்டை கோஸ் ரூ.2 குறைந்து ரூ.22-க்கு விற்கப்பட்டது. நாட்டு பூண்டு ரூ.180-ல் இருந்து ரூ.170-ஆக குறைந்தது. இதேபோல் சுரைக்காய் ரூ.12, புடலங்காய் ரூ.15 என விலை குறைந்துள்ளது.


Next Story